பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இதனை குறிப்பிட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளமையை தொடர்ந்து இன்று கூடிய சங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எனவே பாணின் புதிய விலை 65 ரூபாவாகும்.
ஏற்கனவே கொத்து ரொட்டியின் விலை ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.