இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த சானியா மிர்ஷாவிற்கு தொந்தரவு கொடுத்ததாக அவரது கணவர் சொஹைப் மலிக் பங்களாதேஷ் வீரர் சபீர் ரஹ்மானுக்கு எதிராக முறைப்பாடு அளித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைப் மலிக்கை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சானியா மிர்ஷாவிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை அவரது கணவர் சொஹைப் மலிக் பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனத்திடம் முறைப்பாடாக அளித்துள்ளார்.
அதில் ‘‘ 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி சானியா மிர்ஷாவுடன் பங்களாதேஷில் நடந்த பிறீமியர் ‘லீக்’ போட்டியில் பங்கேற்றேன். அப்போது சபீர் ரஹ்மான் எனது மனைவி சானியா மிர்ஷாவிடம் முறை தவறி நடக்க முயன்றார். இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டுள்ளது.