டேனியல்… சிரம் தாழ்த்தி என்ன கூறுகிறார்னு நீங்களே பாருங்க!

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் கூட்டாக இருந்தவர் தான் டேனியல். ஆரம்பத்தில் அவ்வாறு இருந்த டேனியிடம் இடையே மாற்றம் ஏற்பட்டது.

இவர்களின் கூட்டனியே பல போட்டியாளர்களுக்கு பிடிக்காமல் இருந்தது. இதனால் டேனியல் தந்திரமாக இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தனர்.

அதன் பின்பு மஹத் வெளியேற்றத்திற்குப் பின்பு டேனி பாலாஜியிடம் சரணடைந்தார். என்னதான் இருந்தாலும் ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் போட்ட ஆட்டத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட கோபம் அடங்கவில்லை என்று கூற வேண்டும்.

ஆதலால் நேற்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் டேனி. அவர் வெளியேறிய பின்பு யாரும் வருத்தப்படவில்லை… அவரும் வருத்தப்படவில்லை என்று தான் கூற வேண்டும். மிகவும் மகிழ்ச்சியாக வெளியேறிய டேனியல் முதல்முதலாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.