அமேசன் காடுகளில் மட்டுமே வளரக்கூடிய Camu Camu எனப்படும் பழமானது உடல் எடை அதிகரிப்புக்கெதிராக சாதகமான விளைவுகளைத் தருகின்றமை தெரியவந்துள்ளது.
இது வருங்காலத்தில் உடல் எடை அதிகரிப்புக்கெதிராக சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட முடியும் என நம்பப்படுகிறது.
கனடிய ஆய்வாளர்களால் 8 வாரங்கள் வரை எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்விலேயே இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆய்வில் மேற்படி பழத்தின் சாறு ஊட்டப்பட்டிருந்த எலிகளில், அதை நுகராத எலிகளிலும் பார்க்க 50 வீதமான எடை அதிகரிப்பே அவதானிக்கப்பட்டிருந்தது.
இப் பழத்தின் சாறு எலிகளின் அடிப்படை அனுசேபச் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதாலேயே அவை குறைந்தளவிலான எடை மாற்றத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
மேற்படி பழமானது விட்டமின் – C மற்றும் பொலிபீனோல் சேர்வைகளை அதிகளவில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.