சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும்.
சந்தோஷி மாதா விரதத்திற்கு செய்ய வேண்டியவை
- சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த கடலையும், வெல்லமுமே ஆகும். விரதத்தை வீட்டிற்குள்ளேயோ, வெளியேயுள்ள தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம்.
- சந்தோஷிமாதா படத்தை வைத்து பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். படத்தின் முன் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.
- முதலில் ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும்.
- பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும். கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும்.
- பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த விரதத்தில் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது.
- இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும்.
- பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது.