மஹிந்த ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல்! கொழும்பில் பதற்றம்!

கொழும்பில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் குழுவொன்றின் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கடவத்தை பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடத்தப்படவுள்ள ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொடி கட்டியவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் உட்பட உறுப்பினர் குழுவொன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களை பலி எடுக்க கொழும்பு வரும் நாமல் தலைமையிலான குழுவினரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டிற்கு பின்னர் இலங்கை ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடாகியுள்ளது. எந்தவொரு நபருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு இலங்கை ஜனநாயக நாடாகியுள்ளமை விசேட அம்சமாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்ப்பை நடவடிக்கையினை மேற்கொள்ளும் நாமல் உட்பட பிரதான தலைவர்கள் பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகும்.

இந்த நபர்களுக்கு கடும் நிபந்தனையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு வருபவர்கள் திரும்பி செல்லவில்லை என்றால், அவர்களை எப்படி அனுப்ப வேண்டும் என எங்களுக்கு தெரியும். அடித்தால் அடிப்போம் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.