தினமும் துளசி டீ: நன்மைகள் ஏராளம்!

மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசியை பிரதானமாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • துளசி – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • டீத்தூள் – 2 ஸ்பூன்
  • தேன் அல்லது கருப்பட்டி – சுவைக்கு
  • பால் – தேவையான அளவு
செய்முறை
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் 1 கப் துளசி இலையை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
  • பின்பு அதனுடன் டீத்தூள், கருப்பட்டியை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பின்பு அதனை வடிகட்டி தேவையான அளவு பாலை அதில் ஊற்றி பருகவும்.
  • இந்த டீயுடன் தேன் பயன்படுத்துவதாக இருந்தால் குடிக்கும் போது தேன் சேர்த்தால் போதுமானது. பால் சேர்க்காமலும் இந்த டீயை அருந்தலாம்.
பயன்கள்
  • சுவாச கோளாறு பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள துளசி டீ பருகி வரலாம். மேலும் சளி, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க துளசி டீயை குடிக்கலாம்.
  • மன அழுத்தம் தோன்றுவதற்கு காரணமான கார்டிசால் ஹார்மோன் அளவை சீராக பராமரிக்க துளசி டீ பெரிதும் உதவுகின்றது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • துளசி டீ பருகும்போது உடலில் உள்ள கார்டிசால் அளவு குறைந்து மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றது.
  • துளசி டீ உடலில் உள்ள ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களிடம் இருந்து பற்களையும், நுண்ணுயிரி கிருமிகளிடம் இருந்து வாய் பகுதியையும் பாதுகாக்கவும் மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தடுக்கிறது.
  • கை, கால்களின் மூட்டு இணைப்பு பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதற்கு துளசி எண்ணெய்யை பயன்படுத்தலாம்.