புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்…

விஞ்ஞானிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற்றுநோய்க் கலங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்பதுபற்றி கண்காணித்துள்ளனர்.

இப் புதிய தொழில்நுட்பம் Revolver (Repeated Evolution of Cancer) என அழைக்கப்படுகிறது.

இங்கு புற்றுநோய்க் கலங்களில் ஏற்படும் DNA விகாரங்களின் போக்கு அறியப்பட்டு, வருங்காலத்தில் எவ்வாறான மாற்றங்கள் நிகழலாம் என்பது பற்றிய தகவல்கள் முன்கூட்டியே வழங்கப்படுகிறது.

பொதுவாக புற்றுநோய்க்கலங்கள் தெடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாவதால் அவற்றை சிகிச்சையளிப்பது கடினம்.

எனவே இப் புதிய நுட்பமானது வருங்காலத்தில் வினைத்திறனான சிகிச்சைமுறைகளுக்கு வழிவகுக்கலாம் என நம்பப்படுகிறது.