அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
மேலும் இன்று பலரும் எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் உள்ளது.
மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் நெத்திலி மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இந்த மீனை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
சரும ஆரோக்கியம்
நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கும்.
பற்கள் மற்றும் எலும்புகள்
நெத்திலி மீனில் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
கண் ஆரோக்கியம்
நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
உடல் எடை குறைக்க
நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.
மூளை வளர்ச்சிக்கு
மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
புற்றுநோய் வரமால் தடுக்க
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு
பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது குழந்தைகளை தாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மன அழுத்தம் குறைய
மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.