மென்மையான அடர்த்தியான முடி வேண்டுமா?

தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை.

கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும்.

உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.

எனவே முடி உதிர்தலுக்காக கண்ட கண்ட செயற்கை ரசாயன பொருட்களை பயன்படுத்தாமல் பாரம்பரிய வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு மசாஜ் செய்தாலே ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

பூசணி மாஸ்க்

பூசணி முடி மற்றும் சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. இதில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், புரதம், இரும்பு, துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் போன்ற மற்ற பொருட்களுடன் பூசணி கலந்து தயாரிக்கப்படும் மாஸ்க் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
  • பூசணி சாறு – 1 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – ½ கப்
  • தேன் – 2 தேக்கரண்டி
செய்முறை
  • ஒரு முழு பூசணி காயை சிறிய துண்டுகளாக வெட்டி அதை மிக்ஸில் போட்டு நன்கு அரைத்து பின் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதன் சாறு எடுத்துக்கொள்ளவும்.
  • பின் பூசணி சாற்றில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். மேலும் தேங்காய் எண்ணெய் திட வடிவத்தில் இருந்தால் அதை பூசணி சாறுடன் சேர்க்கும் முன்பு நீங்கள் சூடுபடுத்த வேண்டும்.
  • இறுதியாக, கலவையில் சிறிதளவு தேன் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கி அந்த கலவையை சேமித்து அதை விரும்பியபடி பயன்படுத்தலாம். மேலும் இது குளிர்ந்த இடத்தில் சேமிக்கப்பட்டால் இது 2-3 நாட்கள் வரை நீடிக்கும்.
பயன்படுத்தும் முறை
  • முதலில் முடிவை 4-5 பிரிவுகளாக பிரித்து பின் ஒரு ஹேர் பிரஷ் உதவியுடன் தடவ வேண்டும், இதனை 20-30 நிமிடங்களுக்கு பிறகு வழக்கமான ஷாம்பு கொண்டு அலசவும், தேவைப்படின் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
  • இதனை வாரத்திற்கு 1-2 முறை செய்து வந்தால் மென்மையான மற்றும் அடர்த்தியான நீளமான முடியை பெற முடியும்.