யாழ். பொலிஸாரால் ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் நேற்று மாலை மானிப்பாய் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி நிலோஜன் என்னும் 23 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தலைமறைவாக இருந்த இவரை கடந்த ஆறு மாத காலமாக பொலிஸார் தேடி வந்துள்ளனர்.
இவர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு, வன்முறை மற்றும் களவுச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தற்போது கொக்குவில் பகுதியில் உள்ள தனது காதலியை பார்ப்பதற்கென நேற்று சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த நபர் வருவதை இரகசிய தகவலொன்றின் மூலம் அறிந்து கொண்ட மனிப்பாய்ப் பொலிஸார் விரைவாக செயற்பட்டு இவரைக் கைது செய்ததுடன், இவரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.இவர் இன்று யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.