முகப்பரு போக்க வழிமுறைகள்!

தற்போது முகப்பரு பிரச்சனையானது அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான்.

அவற்றால் பெரும்பாலும் முகப்பருக்கள் போவதை விட, அதனால் பருக்கள் வந்தது தான் அதிகம். சிலருக்கு அந்த பருக்களால் வடுக்கள் கூட வந்துவிடுகின்றன. அதனால் பலருக்கு அந்த வடுவானது, நீண்ட நாட்கள் போகாமல் கருமையாக இருக்கின்றன.எனவே இத்தகைய நிலை ஏற்படாமல் இருப்பதற்கு, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய இயற்கை முறைகளில் இதுவரை பலவற்றை பார்த்துள்ளோம். இப்போது அவற்றில் வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களைக் கொண்டு, எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா!!!

டூத் பேஸ்ட்

முகப்பருக்களை போக்குவதில் டூத் பேஸ்ட் சிறந்ததாக உள்ளது. அதற்கு முகத்தை சுத்தமாக கழுவி, மாய்ச்சுரைசர் தடவியப் பின், சிறிது டூத் பேஸ்ட்டை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருவானது எளிதில் போய்விடும். குறிப்பாக அவ்வாறு டூத் பேஸ்ட்டை பயன்படுத்தும் போது, டூத் பேஸ்ட் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. மேலும் பேஸ்ட் வைப்பதற்கு முன், அதனை ஒரு பருவில் வைத்து, ஏதேனும் எதிர்வினை தெரிகிறதா என்று பார்த்து விட்டு, பின் தடவ வேண்டும். ஏனெனில் சிலருக்கு இது அழற்சியை உண்டாக்கும்.

க்ரீன் டீ

முக அழகைக் கெடுக்கும் பருக்களைப் போக்குவதற்கு, க்ரீன் டீயும் ஒன்று. அதுவும் க்ரீன் டீயை, ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அதனை முகப்பருக்களின் மீது வைத்து தேய்த்து வந்தால், க்ரீயானது பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, எளிதில் நீங்கிவிடும்.

கற்றாழை ஜெல்

சூரியக் கதிர்கள் அதிகப்படியாக சருமத்தில் பட்டாலும், சருமத்தில் பருக்கள் வந்துவிடும். எனவே அத்தகையவற்றால் ஏற்பட்ட பருக்களையும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கு, தினமும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை தினமும் இரவில் படுக்கும் போது செய்வது மிகவும் சிறந்த பலனைத் தரும்.

எலுமிச்சை சாறு

பருக்களை போக்கும் சிறந்த பொருட்களில் எலுமிச்சை சாறும் ஒன்று. அதற்கு தினமும் படுக்கும் போது எலுமிச்சை சாற்றை காட்டனில் நனைத்து, அதனை பரு உள்ள இடத்தில் வைத்து வந்தால், பருக்களில் உள்ள நீர்மமானது மற்ற இடங்களில் பரவாமல் இருக்கும். மேலும் பருக்களில் உள்ள கிருமிகளும் அழிந்து, பருக்களும் வற்றிவிடும்.

வினிகர்

வினிகர் மற்றும் உப்பை கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் சுத்தமான துணியால் துடைத்து, எண்ணெய் இல்லாத மாய்ச்சுரைசரை தடவி வந்தால், சருமத்தில் இருந்து வெளிப்படும் அதிகப்படியான எண்ணெயின் வெளிப்பாடு தடைப்பட்டு, பருக்கள் மேலும் வராமல் தடுப்பதோடு, அந்த பருக்களை எளிதில் போக்கிவிடும்.

ரோஸ்வாட்டர்

சருமத்தை கிளின்சிங் செய்வதற்கு சிறந்த பொருள் என்றால் அது ரோஸ்வாட்டர் தான். அதிலும் ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கலந்து, பரு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனாலும் பருக்கள் போய்விடும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பருக்களை போக்கும் சிறந்த வழிகளுள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதும் ஒன்றாகும். ஏனெனில் உடலை சரியாக இயக்குவதற்கான போதிய சத்துக்களான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் தான், உடலானது சரியாக இயங்கும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள், பெர்ரிப்பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இல்லையெனில் இத்தகைய காய்கனிகளை பருக்கள் உள்ள இடங்களில் அரைத்து தடவி வந்தாலும், பருக்களை போக்க முடியும்.