சேதம் ஏற்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தை பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியிருந்தது.
எனினும், அதனை மாற்றிக் கொள்ளும் கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள புதிய வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத பெருந்தொகை பணத்தை மத வழிப்பாட்டு இடங்களில் காணிக்கையாக வழங்கி கடவுளை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருந்தமையினால் பாரியளவு மக்கள் கூட்டம் ஒன்று கதிர்காமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்றவர்கள் பயன்படுத்த முடியாத நாணயத்தாள்களை உண்டியல்களில் போட்டு சென்றுள்ளனர். இதனால் பெருந்தொகை பணம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கதிர்காம ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எந்த முறையிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியாத நாணயத்தாள்களை ஆலயங்களில் வழங்குவதன் ஊடாக பக்தர்கள் கடவுளையும் ஏமாற்றும் நிலைக்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.