முகத்தில் வளரும் முடியை நீக்க வேண்டுமா? இந்த இயற்கை முறையை பயன்படுத்துங்கள்…

பெண்களின் சருமம் ரோமங்களின்றி மிருதுவானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும்.

இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம். இந்த ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றியில் ரோமம் அதிகளவில் இருக்கும். இந்த ரோமங்களை நீக்க பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, அந்த ரோமங்களை நீக்குவார்கள். சருமத்தில் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. அதில் த்ரெட்டிங், வேக்ஸிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பெண்களின் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு சில வழிமுறைகளும் உள்ளது. அவை இயற்கை முறையில் கடைப்பிடிக்கலாம்.

இந்தியன் நெட்டில் மற்றும் மஞ்சள்

நெட்டில் என்பது தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒருவகை செடி. இது சருமத்தில் குறிப்பாக முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதுவும் இது முகத்தில் வளரும் முடியின் அடர்த்தியை குறைப்பதோடு, நாளடைவில் முடியின் வளர்ச்சியையே தடுத்துவிடும். மஞ்சள், சருமத்தின் நண்பன் என்று கூறலாம். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால், இதை நெட்டில் செடியுடன் சேர்த்து பயன்படுத்தினால் ஒரு நல்ல பலனைக் காணலாம்.

தேவையான பொருட்கள்
  • இந்தியன் நெட்டில் இலைகள் – 1 கையளவு
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை
  1. நெட்டில் இலைகளை நீரில் கழுவி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  3. அதன் பின்பு அந்த பேஸ்ட்டை முகத்தில் வளரும் தேவையற்ற முடியுள்ள பகுதியில் தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவவும்.
  4. இந்த முறையை இரவு தூங்கும் முன் மேற்கொண்டு, மறுநாள் காலையில் கழுவினால், இன்னும் சிறப்பான பலனைக் காணலாம்.
  5. முகத்தில் உள்ள தேவையற்ற முடி நீங்க வேண்டுமானால், இந்த முறையை தினமும் என 4-6 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள்.
மஞ்சள்
  • முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளே பிரதான மருந்துப் பொருளாக பயன்படுகிறது. முகத்தில் அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
  • கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
  • மஞ்சளை பப்பாளி அல்லது கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
  • கடலை மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.
  • வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான மற்றும் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.
  • ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.