9 மணிக்கு மேல் தனியாக வந்தால் உணவு கிடையாது!

இரவு 9 மணிக்கு மேல் திருமணமாக ஆணும், பெண்ணும் சேர்ந்து வந்தால் உணவகத்தில் உணவு வழங்கப்பட மாட்டாது என இந்தோனேசியாவின் ஆட்ஜே மாகாணத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் வசிக்கும் முஸ்லீம் பெண்களுக்கு, ஷரியத் (முஸ்லீம் சட்டம்) மூலம் ஏற்கனவே பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு பெண்ணும், தன்னுடைய கணவரோ அல்லது நெருங்கிய ஆண் உறவினரை தவிர வேறு யாருடனும் கடைகளில் காபி அருந்த கூடாது என்பதாகும்.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், பெண்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்காகவே இயற்றப்பட்டதாக மாகாணம் விளக்கம் அளித்திருந்தது.

இந்த நிலையில், பிர்யூன் மாவட்டத்தில் நேற்று முதல் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் யாரேனும் தனியாக வந்து உணவு கேட்டால் உணவு வழக்கப்படக்கூடாது என்பதாகும்.

இந்த உத்தரவை மீறினால் என்ன தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் மக்கள் கட்டுப்பாட்டை மதித்து நடக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.