குளியல் உடையில் வந்த கதாநாயகி! ஸ்டண்ட் மாஸ்டர் அதிர்ச்சி

குளியல் உடையில் வந்த நாயகியை பார்த்து படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அதிர்ச்சி அடைந்தார்.

புதுமுகம் ராஜ்குமார் நடிப்பில் ‘கூத்தன்’ என்ற படத்தை ஏ.எல்.வெங்கி இயக்குகியுள்ளார். நீல்கிரிஸ் முருகன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் புதுமுகம் ராஜ்குமார், ஸ்ரீஜிதாகோஷ், கைரா நாராயணன், சோனல் சிங், பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் ஆடியோ வெளியிடும் விழாவில், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பேசுகையில் ,’இப்படத்தின் ஹீரோ ராஜ்குமார் பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார். படத்தில் நடித்த ஹீரோயின்கள் மேடையில் அமர்ந்திருக்கின்றனர். ஒரு கதாநாயகி மட்டும் குளித்துவிட்டு அப்படியே அதே உடையில் வந்துவிட்டது போல் டிரஸ் செய்திருக்கிறார். அதை பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டேன். இதுவரை இப்படி நான் பார்த்ததில்லை என்றார்.