தற்போதைய இணையவாசிகல் அமைவரும் மற்றவருக்கு Challenge விடுவதையே பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.
தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர்.
என்னக்கு தெரிந்தவரை இந்த சவால் பிட்னெஸ் சவாலில் ஆரம்பித்து Kiki சவால், Momo சவால், EatTheBean சவால், மேரி பாபின்ஸ் சவால் என பல சவால்களை தொடர்ந்து தற்போது ஸ்னூட் சவால் என புதியவகை சாலன்ஜ்-யை கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்னூட் சவால் (SnootChallenge) என பெயரிடப்பட்டுள்ள இந்த சவாலில் போட்டியிட ஒரு செல்லப்பிராணி வைத்திருக்க வேண்டும்.
செல்லப்பிராணி எதற்காக என்று கேள்வி கேட்கிறீர்களா?. உங்கள் கைகள் மூலம் வட்டம் அல்லது இதயம் போன்ற வடிவத்தை ஏற்படுத்தியோ இல்லது ஏதாவது ஒரு பொருட்களில் வட்ட வடிவத்தை உருவாக்கி அந்த வடிவத்திற்குள்ளே செல்ல பிராணியின் மூக்கை நுழையச் செய்ய வேண்டும்.
இதுதான் ஸ்னூட் சவால்.
#SnootChallenge
Quinlan just heard about this.
He had to try it. #Corgi pic.twitter.com/iRIokqcGHA— D_Vaughn (@D_Vaughn66) 25 August 2018
Gunner was all about the #snootchallenge ? pic.twitter.com/0dUdVpOF86
— Krista Kenna (@whereiskrista) 23 August 2018
நமது இணைய வாசிகள் மனிதகளுக்கு விடுத்த சவால்களை அடுத்து தற்போது செல்லப்பிராணிகளையும் விட்டு வைக்காமல் அவைகளுக்கும் சவால்களை விடுத்து வருகின்றனர்