யாழ் திருமணத்தில் கணவனை கைது செய்த மனைவி! வியப்பில் மக்கள்

யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதி பகுதியில் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்று அங்குள்ள பெருமளவான மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

திருமண வைபவத்திற்கு சென்ற பலரை மண்டபத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை ஒரு நிமிடம் அவர்களை ஸதம்பிதமடையச் செய்துள்ளதுடன், வியப்பையும் அதே சமயம் ஒரு நகைச்சுவையான அனுபவத்தையும் ஒருசேர கொடுத்துள்ளது.

பதாகையில் திருமண திகதியை கணவன் கைதாகும் திகதி எனவும், கைதானவரின் விபரம் என மணமகன் தொடர்பான விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக அந்த மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை அனைவரையும் புன்னகைக்க வைத்துள்ளது.

இந்நிலையில், திருமணத்திற்கு வருகைத்தந்தவர்களுக்கு மணமக்கள் கொடுத்த இந்த வியப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.