ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு முடியாது. அதற்கான வயதை தான் இன்னும் அடையவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு அலையைக் குழப்புவதற்கு அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களின் சதியே இந்தப் பொய்ப் பிரசாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஜனபலய பேரணியில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே நாமல் ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மகிந்த ராஜபக்சவே தீர்மானிப்பார். அரசாங்கம் கொண்டுள்ள அச்சமே இவ்வாறான கட்டுக்கதைகளை பரப்புவதற்கான காரணமென” அவர் மேலும் கூறியுள்ளார்.