ஆந்திராவில் மணமகள் அழகாக இல்லை என்ற காரணத்தினால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அரசு அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஷேக் மாதீன்.
இவருக்கும் சூலுரு பகுதியில் குடியிருக்கும் முபீனா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 2-ஆம் தேதி மிக விமரிசையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆனால் திருமண நடந்த அன்று மாலையில் இருந்து மணமகன் மிகவும் வருத்தத்துடன் மகிழ்ச்சியின்றி காணப்பட்டுள்ளான்.
இதை கவனித்த மணமகனின் தாயார், இது குறித்து தமது மகனிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் தமது மனைவி அழகாக இல்லை எனவும், திருமணத்திற்கு முன்னர் அவர்கள் அளித்த புகைப்படம் வேறு எனவும் கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.
பின்னர் தனது மகனை சமாதானம் செய்த தாயார், மருமகளை தோல்நோய் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சைக்கு கலந்துரையாடியுள்ளார்.
இருப்பினும் வருத்தத்துடனே காணப்பட்ட ஷேக் கடந்த செவ்வாயன்று நண்பரின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.அங்கு அவர் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு வரதததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தார்கள் ஷேக்கிற்கு போன் செய்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரியவந்தது. இதனை கேட்ட குடும்பத்தார் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றியதாக கூறி மணமகளின் வீட்டார் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.