பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சர்ச்சையில் சிக்கியே வளர்ந்த போட்டியாளர் என்றால் அது மஹத் என்று கூறினாலும் மிகையாகாது.
காதலி இருந்தும் மற்றொரு பெண் மீது காதல் இருப்பதாக கூறி பல பிரச்சனையில் சிக்கியவர். இவர் வெளியே வருவதற்கு முன்பே அவருடைய காதலி பிராசி இனி என்னுடைய காதலன் மஹத் கிடையாது என்று பதிவு செய்திருந்தார்.
காணொளியும் வெளியிட்டிருந்தார். ஆனால் சில நாட்களிலேயே அவர் அதை நீக்கியிருந்தார். அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் மஹத் வெளியே வந்ததும் என்னுடைய காதலி பிராசி தான் என்று நிறைய புகைப்படங்கள் பதிவு செய்து வந்தார். தற்போது பிராசி தன்னுடைய இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் எப்போதும் ஒன்றாக என்று மஹத் புகைப்படத்தை போட்டுள்ளார்.
இதனால் இருவரும் மீண்டும் காதலர்களாக இணைந்து விட்டதை குறித்த புகைப்படம் காட்டி கொடுத்துள்ளது.