சென்னையில் சில தினங்களுக்கு முன் அபிராமி என்ற பெண் தனது 2 குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அபிராமியின் டப்மேஷ் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் தனது இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தனது கணவரையும் கொல்ல முயற்சித்த அபிராமி காதல் திருமணம் செய்து கொண்டவர் தான் என்பது தெரியவந்துள்ளது.
திருமணம் நடப்பதற்கு முன்பாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வரவேற்பாளராக அபிராமி பணியாற்றி வந்துள்ளார்.
அதே ஹோட்டலில் கடலூரைச் சேர்ந்த விஜய் வேலைபார்த்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தனக்கு தனியார் நிறுவனத்தில் பனிச்சுமை இருந்த போதிலும், வார விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விஜய் வெளியில் செல்வது வழக்கம்.
அப்போது, பிரியாணி கடைக்குச் செல்வார். அந்தக் கடையில் சுந்தரம் என்பவர் வேலை பார்த்துள்ளார். அவருக்கும் அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகே இருவருக்கும் சந்திப்பு அதிகமாகி கள்ளக்காதல் நிலைக்கு சென்றுள்ளது. அதில் உச்ச கட்டமாக குழந்தைகளை கொன்ற கொடூர செயலும் அரங்கேறியுள்ளது. அபிராமியை கைது செய்து காவல் துறை விசாரித்து வருகிறது.