கிடுகிடுவென அடர்த்தியாக முடி வளர?

வெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும். வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல. முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப உதவுகிறது. சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது.

பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால்,உச்சந் தலையில் ஏற்படும் தொற்றுக்களை எதிர்த்து போராடும். இதனால் முடி கொட்டுவது குறையும்,இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இளநரையை வர விடாமல் செய்யும்.

வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.பேன் தொல்லை குறைகிறது.

வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தி அதிகரிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடி வளர்ச்சிக்கு ஏதுவாகிறது. பொடுகு தொல்லைக்கு சிறந்த ஒரு தீர்வு.

வெங்காய சாறை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  • வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும் மிக்ஸி யில் நன்றாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு மஸ்லின் துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். வெங்காய திப்பிகள் முடிகளில் சேராதவாறு வெறும் சாறை மட்டும் பயன்படுத்தவும்.
வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை

வெங்காய சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும். வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும்.

வாரம் 1 முறை 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம். வெங்காய சாறுடன் வேறு சில பொருட்களை சேர்த்தும் வலுவான மற்றும் பொலிவான கூந்தலை பெறலாம்.