இந்து – முஸ்லீம் காதல் ஜோடியை பிரித்த ஆன்டி-ரோமியோ படை அந்த பெண்ணை, அந்த இளைஞனின் கையில் ராக்கி கட்ட வைத்தும், அந்த பையனை காலில் விழ வைத்தும் தண்டனை வழங்கியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களை கேலி செய்பவர்கள், பெண்கள் பின்னால் சென்று தொல்லை கொடுப்பவர்களை பிடிக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் காவல்துறையில், ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவு உருவாக்கப்பட்டது.கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள்,என பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் ஆன்டி-ரோமியோ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், இவர்கள் கான்பூர் மாவட்டம் காடிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு இந்து பெண்ணும், முஸ்லீம் பையனும் ஜோடியாக இருந்துள்ளனர். அவர்களுக்கு ஆன்டி-ரோமியோ படை அறிவுரை கூறி உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த பெண்இ அந்த இளைஞனின் கையில் ராக்கி கட்டி உள்ளார்.
அந்த பையன் பெண்ணின் கால்களைத் தொட்டு தனது நடத்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து ஆன்டி-ரோமியோ படையை சேர்ந்த ஆயுஷ் கரே, அவரது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது;
ஒரு முஸ்லீம் பையனும், ஒரு இந்து பெண்ணும் ஒன்றாக இருந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டோம். அந்தப் பெண் அந்த பையன் கையில் ராக்கி கட்டினார். இந்த காதல் வேறு பிரச்சினைகளை கொண்டு வர வேண்டாம் என என் இந்து சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுகிறேன் எனக் கூறினார்.