வீட்டு சமையலறையில் உள்ள அதீத மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்ட பொருள் தான் மஞ்சள் தூள்.
மஞ்சள் பொடியை தேனுடன் சேர்த்து கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- சுத்தமான மலைத் தேன் – 100 கிராம்
- மஞ்சள் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகுத் தூள் – 1 சிட்டிகை
- எலுமிச்சை தோல் – 1 டீஸ்பூன்
- ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மஞ்சள் பொடி, மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அத்துடன் எலுமிச்சை தோல் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு நன்கு மூடி அதனை 2 வாரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் பயன்படுத்த வேண்டும்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
- சளி, காய்ச்சல் போன்றவை அதிகமாக இருந்தால் முதல் நாள் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இரண்டாம் நாள் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.
- மூன்றாம் நாள் மூன்று வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால், சளி, காய்ச்சல் பறந்தோடிவிடும்.
- பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டவர்கள் தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வருவது நல்லது.
- சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, நுரையீரல் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி உள்ளவர்கள், தினமும் மூன்று வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடுவது நல்லது.
- ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் மிளகு தேன் கலவையை சேர்த்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, டீ போன்று காலை அல்லது மாலை நேரத்தில் பருகலாம்.
- உணவுக்கு முன் எடுத்தால் தொண்டை மற்றும் நுரையீரலுக்கு நல்லது. உணவு உட்கொண்ட பின் எடுத்தால், குடல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நல்லது.
- மேலும் இந்த கலவை தானாக கரையும் வரை வாயில் வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
எச்சரிக்கை
- பித்தப்பை பிரச்சனை இருப்பவர்கள், மஞ்சளை எடுக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் பித்தப்பை தசைகளைச் சுருங்கச் செய்யும்.
- குறைவான இரத்த அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், இம்மருந்தை எடுக்கும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.