ஒரே நாளில் சளியை வெளியேற்ற??

சளிக்கு பெரும்பாலானோர் கடைகளில் விற்கப்படும் சளி மருந்தைப் பயன்படுத்துவார்கள். சளி மருந்துகளை அதிகமாக சாப்பிட்டால், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் விரைவான இதயத்துடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

இதற்கு அதில் உள்ள கோடின் மற்றும் டெக்ஸ்ட்ரோமெத்ரோஃபேன் தான். ஆனால், இந்த சளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை நிவாரணி உள்ளது.

அது தான் தேன் உறை (Honey Wrap). இது உடனடி நிவாரணத்தை வழங்கக்கூடியது. சரி, இப்போது அந்த தேன் உறையை எப்படி செய்வதென்றும், எப்படி பயன்படுத்துவது என்றும் காண்போம்.
தேவையான பொருட்கள்

சுத்தமான மலைத் தேன்

தேங்காய் எண்ணெய்

அரிசி மாவு

நேப்கின்

கட்டுத் துணி

ஒட்டக்கூடிய மருத்துவ டேப் (Adhesive Medical Tape)
செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தில் தேன் மற்றும் அரிசி மாவை போட்டு கையில் ஒட்டாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் சறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை

தயாரித்து வைத்துள்ள கலவையை நேப்கின் மீது வைத்து, மார்பு பகுதியில் வைத்து, அதன் மேல் அடிப்படும் போதும் பயன்படுத்தும் கட்டுத் துணியை போர்த்தி, ஒட்டக்கூடிய மருத்துவ டேப்பால் ஒட்ட வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இந்த தேன் உறையை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் மார்பு பகுதியில் ஒட்டி எடுத்து விட வேண்டும்.

பெரியவர்களுக்கு இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக இருந்தால், இரவு முழுவதும் இந்த தேன் உறையை வைத்திருக்கலாம். குறிப்பு சளி அளவுக்கு அதிகமாக இருந்தால், தொடர்ந்து 2-3 நாட்கள் பின்பற்றுங்கள். இதனால் சளி முற்றிலும் வெளியேறிவிடும்.