கள்ளகாதலால் தான் பெற்ற அழகான இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டு கள்ளகாதலுடன் தப்பித்து செல்ல முயற்சி செய்தார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண்.
நான் ஏன் இவாறு ஆனேன், சுந்தரம் உடன் தனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என அனைத்தையும் கூறியுள்ளார் அபிராமி. தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக நாம் பார்க்கும் வீடியோ டப்ஸ்மாஷ். தற்போதைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதற்கு அடிமையாக இருக்கின்றனர்.
இதுபோன்று ஒரு செயலிதான் மியூசிக்கலி. கணவன் மனைவி தொடங்கி அனைவரும் தங்களது அந்தரங்க வீடியோவை இதுபோன்ற செயலிகளில் பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் பாதிக்க பட்டவர்தான் இந்த அபிராமி.
தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற அபிராமியை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து யாரிடமும் பேசாமல்,சாப்பிடாமல் இருந்த அபிராமி மெல்ல மெல்ல சிறையில் இருக்கும் சகக் கைதிகளிடம் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் மியூசிக்கலியால் தாம் நான் நாசமானேன். நானும் சுந்தரமும் சேர்ந்தது மியூசிக்கலில் தான் என்று சோகத்துடன் கூறியுள்ளார்.