நகர்ப்புறங்களில் பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. சிறிது வெந்தாலே வடிவம்
குலைந்து கரைந்துபோகும் அதன் சுவை பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பூசணியைக்
கொண்டு செய்யப்படும் காசி அல்வாவை பிடிக்கவில்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள் .
இந்த காசி அல்வாவை சென்னை மந்தை வெளியில், செயின்ட் மேரீஸ் சாலையில் உள் ள ‘சுபம் ஃபுட்ஸ்’ இனிப்பகத்தில் ருசிப்பது உன்னதமான அனுபவம். பிரபல சமையல்காரர் காஞ்சிபுரம் சுப்பிரமணிய அய்யரின் மகன் கணேசன்தான் இந்த இனிப்பகத்தின் நிறுவனர்.காசிக்கும் இந்த அல்வாவுக்கும் என்ன சம்
பந்தம்? பூசணிக்காய்க்கும் பேய்க்கும் உள்ள தொடர்பு போலவே இதுவும். காரணம் தெரியவில்லை. காசி உள் பட வடமாநிலங்களில் பூசணி அல்வா என்ற பெயரில் ஒரு பதார்த்தம் கிடைக்கிறது. ஆனாலும், இதோடு தொடர்பில்லாத சுவையையும் வடிவமும்
கொண்டது அது.நன்கு முற்றிய, பெரிய சைஸ் பூசணிக்காய், சர்க்கரை, நெய், முந்திரி, திராட்சை,
ஏலக்காய்… தேவைப்பட்டால் வெள்ளரிவிதை. இவையே காசி அல்வாவின்
உள்ளடக்கம்.பூசணிக்காயின் தோலையும் விதைகளையும் அகற்றிவிட்டு, சீவலாக துருவிக்கொள்ள வேண்டும். அந்தத் துருவலை நன்கு வேகவைத்து,தண்ணீரை வடிகட்ட வேண்டும். துருவலை ஒருவெள் ளைத்துணியில் கொட்டி நன்றாகப் பிழிந்து நீரை அகற்றிவிட்டு, கொஞ்சம் நெய்யை ஊற்றி வதக்கவேண்டும். வதங்கியபிறகு சர்க்கரையைக் கொட்டி கொதிக்க விட வேண்டும். (தண்ணீர் தேவையில்லை.சர்க்கரையே பாகுவாகி கொதிக்கும்!) கொதிக்கும் தருணத்தில் தேவையான அளவு கேசரி பவுடரை சிறிது பாலில் கலந்து சேர்க்க வேண்டும்.இன்னொரு அடுப்பில் சட்டி வைத்து, மீதமுள்ள நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் , முந்திரி, திராட்
சையை வறுத்து, கொதிக்கும் கலவையில் கொட்ட வேண்டும். முடிந்தது. மணக்க மணக்க, ஆவி பறக்க
பறக்க பரிமாறலாம்.மந்தைவெளி சுபம் ஃபுட்ஸ் இனிப்பகத்தில் காலை 11 மணிமுதல் இரவு 7 மணி வரை சுடச்சுட கிடைக்கிறது, கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும் இதமான இனிப்பு காசி அல்வா.