திருவண்ணாமலையில் தேசிய விவசாய சங்க தலைவர் யோகேந்திர யாதவ் இன்று கைது செய்யப்பட்டதற்கு நடிகர் கமல்ஹசன் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது: தமிழக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கச் சென்ற நண்பர் திரு யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்குரியது, கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.