நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் சிடி ஸ்கேன் சென்டரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட ஆட்சியர் உள்பட பலர் கலந்துகொண்டனர். தடபுடலான ஏற்பாடுக ளுடன் விழாகளை கட்டிய நிலையில், தற்போது புதிதாக அமைக்கப்பட்ட சி.டிஸ்கேன் குறித்து சமூக வலைத்தளங்களில் உலா வரும் கருத்துக்களால் பொது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் அரசு மாவட்ட தலை மை மருத்துவமனையில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஸ்கேன் இயந்திரத்தை இங்கு எடுத்து வந்து அமைத்துள்ளதாகவும் மயிலாடுதுறை மருத்துவமனைக்காக வரவழைக்கப்பட்ட சிடி ஸ்கேன் நாகப்பட்டி னம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அதில் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் பதில் கூற மறுத்து விட்டனர். ஏற்கெனவே மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முறையாக பணியில் இருப்பதில்லை, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது.
அனுமதிச் சீட்டு வாங்குவது முதல் பிணவறை வரை தலைவிரித்தாடும் லஞ்சம், சாதாரண சிகிச்சையைக் கூடஅளிக்காமல் தஞ்சாவூர், திருவாரூர்,சிதம்பரம் பகுதிகளில் உள்ள மருத்து வக் கல்லூரிக்கு நோயாளிகளை அலைக்கழிப்பது என ஏராளமான குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
இந்த நிலையில் பழைய சிடி ஸ்கேன் இயந்திரத்தை வைத்து தடபுடலான விழா தேவை தானா? தற்போது அமைக்கப்பட்டுள்ள ஸ்கேன் இயந்திரம் எத்தனை நாளுக்கு பயன்பாட்டில் இருக்கும்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.