கட்டுநாயக்கவில் கோபக்கார சாரதி ஒருவரின் செயற்பாடு காரணமாக ஏற்பட்ட விளைவு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது.
கந்தான பிரதேசத்தில் சாரதி ஒருவர் கடைக்குள் வாகனத்தை நிறுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடைக்கு முன்னால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சாரதி இவ்வாறு கடைக்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
மோதலில் கோபமடைந்த சாரதி, கடைக்கு நட்டம் ஏற்படுத்த திட்டமிட்டு வாகனத்தை இவ்வாறு ஓட்டிச் சென்றுள்ளார்.
சாரதியின் இந்த செயலினால் கடைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது பொலிஸார் தலையிட்டு சாரதியை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.