ஈரோடு மாவட்டத்தில் இலங்கை அகதி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
அரச்சலூரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலாநி கர்ப்பமுற்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
காலாநிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறினர்.
பின்னர் ஈரோட்டில் உள்ள தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கலாநிக்கு, இன்று பிரசவ வலி ஏற்பட்டது.
அவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது. அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலாநி பெற்றெடுத்தார்.
2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை அறிந்த கணவர் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான ஒன்று என்பதால் இவர்களது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
ஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் வரைதான் பிறந்திருக்கிறது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.