குழந்தை ஒன்று தனது அம்மாவுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்: சேட்டை பண்றது தப்பா..? தப்பில்லையா..?
குழந்தை: தப்புத்தான்.. அதற்கு என்ன சொல்லணும்..?
தாய்: அதுக்குத்தான் அடிக்கிறது.. புரிஞ்சதா..?
குழந்தை: அடிச்சா தப்பு.
தாய்: என்ன..?
குழந்தை: மெதுவாக வாய்ல சொல்லணும். திட்டாம.. அடிக்காம வாய்ல சொல்லணும்.
தாய்: அதுக்கு நீ சேட்டை பண்ணாம இருக்கணும்..
குழந்தை: சேட்டை பண்ணாலும் வாய்ல குணமா சொல்லணும்.
தாய்.. இப்படி எதுக்கு நீ அழுதுகிட்டு இருக்கிற..?
குழந்தை: அடிச்சா.. இப்படி அழுகாம என்ன செய்வாங்க..? நீயே சொல்லு..
தாய்: சேட்டை பண்ணா அடிக்காம என்ன பண்ணுவாங்க.. நீயே சொல்லு..
குழந்தை: குணமா வாய்ல சொல்லணும்.
ஒரு தாய்க்கும், குழந்தைக்குமான உரையாடலில் குழந்தைகள் சிறு வயதிலேயே தெளிவாக இருப்பதும், பெற்றோர்கள் இந்த வயதிலும் பொறுப்பில்லாமல் இருப்பதையே உணர்த்துகிறது.