முகம் பளபளக்க 5 பயனுள்ள அழகு குறிப்புகள்!

ஆரஞ்சுபழ தோலை நன்றாக காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அத்துடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து நன்றாக அரைத்து பொடியாக்கவும். மேலும் அதோடு கடலைமாவு 2 கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகம் பளபளப்பு அடையும்.

பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்ட, அப்போது வியர்வை வரும், அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

தக்காளியை நன்கு அரைத்து அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்..

வெண்ணை சிறிதளவு எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்த பின் சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் தோல் மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை நன்கு கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து , அரை மணி நேரம் கழித்து அதன் பின் முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.