அபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு! – லட்சுமி ராமகிருஷ்ணன்

காதலனுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசையே குழந்தைகளை கொலை செய்ய தூண்டியுள்ளதாக, பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை குன்றத்தூரில் கடந்த 30 மற்றும் 31-ஆம் திகதிகளில் அபிராமி என்ற பெண் காதலனுக்காக தன்னுடைய இரண்டு குழந்தைகளை பாலில் மாதவிடாய் மாத்திரைகளை கலந்து கொடுத்தும் மூச்சை நிறுத்தியும் துடிக்க துடிக்க கொலை செய்தார்.

குழந்தைகளை கொலை செய்த அவர், கனவரையும் கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை நடத்தி வந்த லட்சுமி ராம கிருஷ்ணன் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், அபிராமி செய்த செயலை என்னால் நம்பவே முடியவில்லை. இயற்கையாகவே ஒரு தாய் தன்னுடைய குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றே நினைப்பாள், அபிராமி குழந்தைகள் மேல் பாசம் இல்லாதவராக இருந்திருந்தால் குழந்தையை பெற்று வளர்ந்திருக்க மாட்டாள்.

அவர் இப்படி நடந்து கொள்ள முக்கிய காரணம், ஒரு வேலை அவர் மன ரீதியாக தெளிவில்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது அவருக்கு வேறு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும்.

தன்னுடைய மனதை அடக்க முடியாத அளவுக்கு அபிராமிக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்க வேண்டும். தன்னுடைய ஆசை கண்ணை மறைத்து குழந்தை மற்றும் கணவரை அவர் கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

கள்ளக்காதலால் சில கணவர்கள் தன்னுடைய மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டவர்களுமே தவிர, குழந்தைகளை யாரும் கொல்ல வேண்டும் என நினைக்கமாட்டார்கள். ஆனால் அபிராமி இப்படி செய்ததை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.