வாலி அஜித் திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். அப்படம் அவருக்கு மட்டுமில்லை, சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா என பலருக்கும் அது மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.
இந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘வாலி என் மோஸ்ட் பேவரட், கண்டிப்பாக வாலி இரண்டாம் பாகம் வந்தே ஆகவேண்டும்.
அதில் ஹீரோயினாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், நான் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தாலே போதும்’ என்று ஜாலியாக பேசியுள்ளார்.
சிம்ரன் நடிப்பில் இந்த வாரம் சீமராஜா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தில் சிம்ரன் முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.