ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய உடல் ஆரோக்கியம் சருமம் போன்றவற்றை ஆரோக்கியத்துடன் பராமரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதற்கு தனிப்பட்ட முறையில் நீங்கள் மெனக்கெட தேவையில்லை மாறாக ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் 25 லிருந்து 30 சதவீதம் வரை இந்த மார்பக புற்று நோய் வருவதை குறைக்கலாம்.
தானியங்கள், நார்ச்சத்து உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.
மார்பக புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் அற்புத உணவுகள்
ப்ளூபெர்ரீஸ்
ப்ளூபெர்ரீஸ் எல்லாரும் விரும்பி சாப்பிடும் பழம். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மார்பக புற்று நோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்கு புற்று நோயை உண்டாக்கும் அழற்சியை தடுத்து உடலை புற்று நோய் தாக்கத்தில் இருந்து காக்கிறது.
பிரேசில் நட்ஸ்
பிரேசில் நட்ஸில் செலினியம், நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் அடங்கியுள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக ஏற்படும் அழற்சியை தடுத்து புற்று நோய் வளர விடாமல் தடுக்கிறது. இதை உங்கள் சாலட் உணவிலோ அல்லது தினசரி உணவிலோ சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
காளாண்
காளான்கள் மார்பக புற்று நோயை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்து கொண்டால் மார்பக புற்று நோய் வருவதை தடுக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது மிகவும் சிறந்தது.
மாதுளை பழம்
மார்பக புற்று நோயை தடுப்பதில் மாதுளை யை பரிந்துரைக்கின்றன. இதிலுள்ள பாலிபினோல், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் வளருவதை தடுக்கிறது. மேலும் இரும்புச் சத்து உடலுக்கு கிடைப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கிறது.
அடர்ந்த பச்சை நிற காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளும் நமக்கு புற்று நோய் வருவதை தடுக்கிறது. இதிலுள்ள விட்டமின் பி, நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் குளோரோபைல் போன்றவை புற்று நோய் செல்களை உடைத்தெறிகிறது.
பூண்டு
பூண்டு மார்பக புற்று நோய் வருவதை தடுப்பதோடு புரோஸ்டேட் புற்று நோய், குடல் புற்று நோய் போன்றவற்றிலிருந்தும் நம்மை காக்கிறது. இதிலுள்ள அலுயியம் புற்று நோயை எதிர்க்கும் பொருள். எனவே தினமும் காலையில் பூண்டு பல் சாப்பிட்டாலே போதும் புற்று நோய் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
வால்நட்ஸ்
வால்நட்ஸில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் போன்றவை புற்று நோய்க்கு எதிராக செயல்படுகிறது. எனவே தினமும் இந்த உணவை எடுத்துக் கொண்டால் புற்று நோயிலிருந்து தப்பிக்கலாம்.