பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷனில் இருந்து ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டது பொய், மக்களை ஏமாற்றும் நாடகம், இதற்கு கமல்ஹாசனும் உடந்தையாகை விட்டார். டி.ஆர்.பி-க்காக ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டனர் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நாடகங்களை தில்லு முல்லு செயல்களையெல்லாம் மறைப்பதற்காக தான் ஓட்டுகள் குறைந்து விட்டது. ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார். மக்கள் பேசினால் போதாது ஒட்டு போட வேண்டும் என கமல்ஹாசன் கூறினார். ஏன் ஐஸ்வர்யா பெற்ற ஓட்டுகளை மட்டும் காண்பிக்க வேண்டும். நாமினேஷனில் இருந்த அனைவரின் ஒட்டு விவரங்களையும் காட்டி இருக்கலாமே என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
40 வருடங்களாக கமல்ஹாசன் சேர்ந்து வைத்திருந்த பெயரை 100 நாட்கள் நிகழ்ச்சிக்காக முற்றிலும் கெடுத்து கொண்டார் என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர். இதோ அவர்களின் கருத்துகளை நீங்களே பாருங்கள்.