முழு அடைப்பு போராட்டம் எதிரொலி..! பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்..!!

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டேவருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருவதால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் பாதி மடங்கு அங்கேயே முடங்கியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்து உள்ளது. இன்றைய பெட்ரோல் விலை 0.25 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.91 ரூபாயாகவும் உள்ளது. டீசல் விலை 0.23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 76.98 ரூபாயாகவும் உள்ளது.

தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துகொண்டேபோவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.