உலகளவில் முதலிடம் பிடித்த இலங்கை..

உலகின் அனைத்து துறைமுகங்களையும் பின்தள்ளி கொழும்பு துறைமுகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உலகின் வளர்ச்சி விகிதத்திற்கமைய கொழும்பு துறைமுகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

உலகின் 30 முக்கிய துறைமுகங்களை முந்திச் சென்று கொழும்பு துறைமுகம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக, எல்பாலைனர் என்ற சர்வதேச தரநிர்ணய முகவரகம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை சிங்கப்பூர் துறைமுகமும், சீனாவின் குஏன்ஷு துறைமுகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

2018 முதல் அரையாண்டு காலப்பகுதியில் கொழும்பு துறைமுகத்தில் 15.6 வீத வளர்ச்சியைக் கொண்ட கொள்கலன் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை ஐரோப்பா, டுபாய் மற்றும் ஆசிய துறைமுகங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகம் வெளிப்படுத்திய வளர்ச்சி மிகவும் அதிகம் என இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.