இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வற் வரியை மீள செலுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலா பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் 15 வீத வற் வரி மீண்டும் அவர்களுக்கே செலுத்தப்படவுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறும் போது கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து உரியவர்களின் வற் வரிப் பணம் வழங்கப்படவுள்ளது.
இந்த நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட கவுண்டர் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் திறக்கப்படவுள்ளது.
புதிய நடைமுறையை அமுல்படுத்த வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருவாய் திணைக்களத்தில் சுற்றுலா வற் வரியை மீள வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கள் வர்த்தக நிறுவனங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு சுற்றலா பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.