மாங்காய்க்காக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்ட விநோத சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் சாலியபுர என்ற பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தெரியவருகையில், குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அயலவர் வீடொன்றிலிருந்து பத்தொன்பது மாங்காய்களைத் திருடி தம்வசம் வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு நேற்றைய தினம் அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக நீதவான் ஹர்ச கெக்னுவெல முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கை விசாரித்த நீதவான் எதிர்த் தரப்பின் மறுப்பின் காரணமாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதில் சந்தேக நபராகக் கருதப்படும் குறித்த பெண் தான் அவ்வளவு மாங்காய்களைத் திருடவில்லை என்றும் கறிக்காக மூன்று மாங்காய்களை மட்டுமே திருடியதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எவ்வாறாயினும் குறித்த 19 மாங்காய்களை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதுடன் வழக்குப் பொருட்களாக அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.