இலங்கையின் கண்டுபிடிப்பு! பல பில்லியன் டொலருக்கு வாங்கத் தயாராகும் வெளிநாடு

இலங்கை தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை, பெருந்தொகை பணத்தை வழங்கி பெற்றுக்கொள்ள வெளிநாடு ஒன்று தயாராகி உள்ளது.

புதிய கண்டுபிடிப்புக்கு பல பில்லியன் டொலருக்கும் அதிகமான விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு பலமான வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தயாராகி வருகிறது.

இதுவரையில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக இது காணப்படுகின்றது.

இந்த கண்டுபிடிப்பின் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகை பணத்தை வழங்க குறித்த வெளிநாட்டு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

புதிய தயாரிப்புக்கான உரிமை குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டால், விற்பதற்கு அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கிடைக்கவுள்ளது.

தற்போது குறித்த கொடுக்கல் வாங்கல் மற்றும் தயாரிப்பு தொடர்பான தகவல்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதிய கண்டுபிடிப்பு தொடர்பான முழுமையான விபரங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.