பொலநறுவையில் நேற்று முன்தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
பொலநறுவை, வெலிகந்த பிரதேசத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் தந்தை தனது 2 பிள்ளைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த மூவரும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.உயிரிழந்த நபர் தனது பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவி சில மாதங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் தொழில் செய்யும் தனது மூத்த மகனுடன் மனைவி தங்கியிருப்பதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய அந்த நபரின் மனைவியுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளனர். தான் அடுத்த மாதம் வருவதாக மனைவி கூறியுள்ளார். ஆனாலும் மனைவி வரவில்லை.இதன் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியினால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.