மீண்டும் நின்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ திருமணம்…! காரணம் தெரியுமா?

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன். அவருக்கு வயது 43 . இவரது சொந்த ஊர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் ஆகும். அவருக்கும் கோபி அருகே உள்ள உக்கரத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரது மகள் சந்தியா என்ற 23 வயதான இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

பிறகு மணப்பெண் சந்தியா திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார். பின்னர் சந்தியாவை கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் கூறுகையில், எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எனது வீட்டில் என்னை கட்டாயப்படுத்தினார்கள். எனக்கும் நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கும் 23 வயது வித்தியாசம் உள்ளது என கூறினார்.

தன்னை வெறுத்து ஒரு பெண் சென்றுவிட்டதால், திருமணம் நிச்சயித்த அதே முகூர்த்தத்தில் வேறு ஒரு பெண்ணை மணக்க இருக்கிறார் எம்.எல்.ஏ. இந்த திருமணமும் முதல்வர் தலைமையில் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் குறித்த நாளுக்குள் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாக தெரிகிறது. அதாவது இன்றுதான் ஈஸ்வரனுக்கு திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய பெண் வீட்டார் தரப்பில் போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

உரிய கால அவகாசம் இல்லாததால் திருமணம்தான் குறித்த நேரத்தில் நடைபெறவில்லை.. இருந்தாலும் பெண் கிடைத்துவிட்டால், வருகிற ஐப்பசி மாதம் திருமணத்தை வைத்திருப்பதாக எம்எல்ஏ தரப்பில் தெரிகிறார்கள்.