இந்த பூ பூப்பதற்கு இப்படி ஒரு திருவிழாவா? கோலாமாக கொண்டாடும் மக்கள்..!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி, சின்னக்குன்னூர், கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மலைகள் பூத்துக் குலுங்கும்.

நீல குறிஞ்சி மலர் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றுவருகிறது. சரியாக 12 வருடங்களுக்கு முன்பு 2006ல் கடைசியாக இந்த மலர் பூத்துள்ளது. அப்போது உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து மலரை பார்க்க பல லஞ்ச கணக்கான மக்கள் வருகின்றனர்.

சுமார் 2 மாதம் இந்த மலர் பூத்து குலுக்கும். இந்த மலர் மூணாரில் வரும் அக்டோபர் வரை பூத்து குலுக்கும். இதை பார்க்க இப்போதே அங்கு கூட்டம் அதிகரித்து வருகிறது.

சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூ பூத்து குலுங்குகிறது. பார்க்கவே நீல நிற சேலை போல இந்த பகுதி காட்சி அளிக்கிறது.