நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம் ” படத்தில் நடித்து வருகிறார்.
அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் “விஸ்வாசம் ” படத்தில் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்கிறார்.
படத்தின் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் 30 நாட்கள் நடக்கயுள்ளது. அடுத்தகட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு வேடத்தில் அஜித் மதுரை பாசையில் தமிழ் பேசி நிடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித் ஷுட்டிங்கில் அஜித் மாஸ் காட்டி வருகிறார்.