சீனாவின் கடன் பொறிக்குள் சிறிலங்கா விழுந்து விட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
வியட்னாமின் தலைநகர் ஹனோயில் நடைபெறும், உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள ரணில் விக்கிரமசிங்க, சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களின் கட்டுப்பாட்டை சீனாவிடம் இழந்து விட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால், சீனாவின் உயர் வட்டி வீதக் கடன்களால் நாடு கடன்பொறியில் சிக்கியது என்று நான் நம்பவில்லை.
நாங்கள் சீனாவுடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம். கணிசமானளவு சீன முதலீடுகள் உள்ளன. சீனாவின் கடன்களும் இருக்கின்றன.இதனை ஒரு அச்சுறுத்தலாக நான் பார்க்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.