விநாயகர் சதுர்த்தி!. வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி!

விநாயகர் சதுர்த்தியான இன்று நாடுமுழுவதும் மங்களகரமாக விநாயகர் முழக்கமாக கோலாகலமாக கொண்டாட படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு இன்று காலை சிறப்பு பூஜை செய்து அணைத்து சிலைகளுக்கும் கண் திறக்கப்பட்டு இசை முழக்க விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களின் மிக முக்கியக் கடவுளாக கருதப்படும் விநாயகரின் பிறந்தநாள் விழாவை விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகவாழ் இந்தியர்கள் அனைவர்களும் இன்று இவ்விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் விநாயகர் படத்தையும் பகிர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினமான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.