45 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்!

பிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரிவ் என்ற நபர் பிறப்பிலேயே ஆணுறுப்பு இல்லாமல் பிறந்த காரணத்தால் தற்போது அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ரிவ்க்கு தற்போது 45 வயதாகியுள்ளது. இந்நிலையில் இவருக்கு மான்செஸ்டரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆணுறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இவரது கைகளில் இருந்து சதைகளை எடுத்து மருத்துவர்கள் பிறப்புறுப்பை வடிவமைத்து பொருத்தியுள்ளனர், சுமார் 10 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்காக £50,000 பவுண்ட் செலவு செய்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரிவ் கூறியதாவது, தற்போது நான் புது மனிதனாக உணர்கிறேன், இந்த அறுவை சிகிச்சையின் மூலம் 45 வயதில் நான் எனது கன்னித்தன்மையை காதலியிடம் இழந்துள்ளேன் என கூறியுள்ளார்.